சனி, 9 டிசம்பர், 2017

நம் தமிழில் சொல்லும் வகைகள்


சொல்லின் பொருள், இடம், நிலைமை என அனைத்துமறிந்து,
சொல்லும் வகையறிந்து அதனடிப்படையில் 
சொற்களை வகுத்துப் பகுத்து, கூறும் முறைக்கே வேறுவேறு பேர் வைக்கும்
சொல்வளம் நிறைந்தது நம்மொழி.


சொல்லும் வகைகள்:
  1. அசத்தல்   = அசை பிரித்துச் சொல்லுதல்
  2. அறைதல்  = உரக்கச் சொல்லுதல்
  3. இசைத்தல்  = கோவைபடச் சொல்லுதல்
  4. இயம்புதல் = இயவொலியுடன் சொல்லுதல்
  5. உரைத்தல்  = செய்யுட்கு உரை சொல்லுதல்
  6. உளறுதல்  = அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச் சொல்லுதல் 
  7. என்னுதல்  = ஒரு செய்தியைக் சொல்லுதல் 
  8. ஓதுதல் = காதில் மெல்லச் சொல்லுதல்
  9. கரைதல் = அழுது அல்லது அழைத்துச் சொல்லுதல்  
  10. கழறுதல் = கடிந்து சொல்லுதல்
  11. கிளத்தல் = ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல் 
  12. குயிற்றுதல் = குயிற்குரலிற் சொல்லுதல் 
  13. குழறுதல் = நாத்தடுமாறிச் சொல்லுதல் 
  14. கூறுதல் = கூறுபடுத்துச் சொல்லுதல்  
  15. கொஞ்சுதல் = செல்லப்பிள்ளைபோற் சொல்லுதல் 
  16. சாற்றுதல் = அரசனாணையைக் குடிகளுக்கறிவித்தில் (proclamation)
  17. செப்புதல் = வினாவிற்கு விடை சொல்லுதல் 
  18. சொல்லுதல் = இயல்பாக ஒன்றைச் சொல்லுதல் 
  19. நவிலுதல் = பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல் 
  20. நுதலுதல் = ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
  21. நுவலுதல் = நூலைக் கற்பித்தல்   
  22. நொடித்தல் = கதை சொல்லுதல் 
  23. பகர்தல் = பகிர்ந்து விலை கூறுதல் 
  24. பலுக்குதல் = உச்சரித்தல் 
  25. பறைதல் = ஒன்றைத் தெரிவித்தல்
  26. பன்னுதல் = நுட்பமாய் விவரித்துச் சொல்லுதல்
  27. பிதற்றுதல் = பித்தனைப் போலப் பேசுதல்
  28. புகலுதல் = ஒன்றை விரும்பிச் சொல்லுதல்
  29. புலம்புதல் = தனிமையாய்ப் பேசுதல் 
  30. பேசுதல் = உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல் 
  31. மாறுதல் = மாறிச் சொல்லுதல் 
  32. மிழற்றுதல் = கிளிக்குரலிற் சொல்லுதல் 
  33. மொழிதல் = சொற்றிருத்தமாகப் பேசுதல் 
  34. வலித்தல் = வற்புறுத்திச் சொல்லுதல் 
  35. விள்ளுதல் = வெளிவிட்டுச் சொல்லுதல் 
  36. விளம்புதல் = பலர்க் கறிவித்தல் 
  37. நொடுத்தல் = விலை கூறுதல்
       
நன்றி: 
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - ஞா.தேவநேயப் பாவாணர்
                  
இயக்குநர்
செ.சொ..தி.இயக்ககம்
தரமணி,சென்னை 600113, தமிழ் நாடு

வியாழன், 17 ஜனவரி, 2008

வணக்கம்.

வணக்கம்.
வருகைக்கு நன்றி.